அடேங்கப்பா! ஒரு ட்வீட் செய்ய 19 கோடி பணம்!
அடேங்கப்பா! ஒரு ட்வீட் செய்ய 19 கோடி பணம்!
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்ய அமரிக்க பாப் பாடகி ரிஹானாவிற்கு, பிரபல நிறுவனங்கள் மூலம் ரூ .19 கோடி வழங்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவை மையாக கொண்டு "பொயட்டிக் நீதி அறக்கட்டளை (PJF) என்ற அமைப்பு, சட்ட விரோத போராட்டங்களுக்கு ஆதரவாக “உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருவதாக 'தி பிரிண்ட் செய்திகள்' தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், காலிஸ்தானி இயக்கத்தை சேர்ந்த மோ தலிவால் இயக்குநராக உள்ள PR நிறுவனமான ஸ்கைரோக்கெட் என்ற நிறுவனம், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் ஸ்டார் ரிஹானாவுக்கு ட்வீட் செய்ய இந்திய மதிப்பில் சுமார் 19 கோடி ரூபாய் 2.5 மில்லியன் டாலர் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், PR நிறுவனங்களில் மேலாளராக பணியாற்றிய மோ தலிவால் மற்றும் மெரினா பேட்டர்சன் மற்றும் கனடாவில் உலக சீக்கிய அமைப்பின் இயக்குநர் அனிதா லால் மற்றும் கனேடிய எம்.பி. ஜக்மீத் சிங் போன்றவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், அனிதா லால் பொயட்டிக் நீதி அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது கிரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.