சிங்கம் களமிறங்கிடுச்சே... இன்று முதல் விஜயகாந்த் பிரச்சாரம் !

சிங்கம் களமிறங்கிடுச்சே... இன்று முதல் விஜயகாந்த் பிரச்சாரம் !

Update: 2021-03-24 08:35 GMT

இன்று முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 5 நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தமிழாக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிற நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, அமமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

அதாவது, கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் அடுத்தடுத்து ஏற்பட்ட குழப்பங்களால் பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக கூட்டணியில் இருந்து தேமுதிகவை அதிமுக கழற்றிவிட்டது. இதனால் தேமுதிகவினர் அதிமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

பின்னர் தேமுதிக அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் எப்போது பிரச்சாரத்திற்கு வருவார் என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து, இன்று முதல் விஜயகாந்த் 5 நாட்களுக்கு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். முதல்கட்டமாக இன்று கும்மிடிப்பூண்டியில் தனது பிரச்சாரத்தை தொடங்கும் அவர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 5 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

Tags:    

Similar News