ரயிலில் பயங்கர தீ விபத்து… 5 பெட்டிகள் எரிந்து நாசம்!!
ரயிலில் பயங்கர தீ விபத்து… 5 பெட்டிகள் எரிந்து நாசம்!!
பீகாரில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மதுபானி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் 5 பெட்டிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
ரயிலில் ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாக இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததை அடுத்து, ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர்,தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், நின்று கொண்டிருந்த ரயிலில், அதுவும் ஆட்கள் யாரும் இல்லாத ரயிலில் எவ்வாறு தீ பற்றி இருக்கும் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
India Bihar: Fire in Swatantra Senani Express at Bihar's Madhubani station; 5 empty coaches gutted, probe ordered: A massive fire broke out in a train in Bihar's Madhubani railway station. The train was stationed empty at the time of the incident. At least 5 coaches of the train pic.twitter.com/LXtq53UG2C
— worldnews24u (@worldnews24u) February 19, 2022
newstm.in