ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்… 3 பெண்கள் மீட்பு!!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்… 3 பெண்கள் மீட்பு!!

Update: 2022-03-12 07:00 GMT

மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த ஸ்பா உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தானே மாவட்டம் மீரா பயந்தர் பகுதியில் ஜேம்ஸ் ஹரகம்புங் (27) என்ற இளைஞர் மசாஜ் செய்யும் ஸ்பா ஒன்றை வைத்து நடத்தி வந்தார். ஆனால் அவர் ஸ்பா என்ற பெயரில் மசாஜ் செய்யும் போர்வையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாக தகவல் கசிந்தது.

அவர், இளம்பெண்களை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக மகாராஷ்டிராவின் மனித கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து லத்தீஃப் பார்க் அருகே இருந்த அந்த ஸ்பா நிலையத்துக்குச் சென்று மூன்று இளம்பெண்களை மீட்ட போலீஸார் உரிமையாளர் ஜேம்ஸை கைது செய்தனர். மேலும் மசாஜ் நிலையத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் மேற்கொண்டு விசாரணையும் நடத்தியுள்ளனர். அதன்படி, இளம்பெண்களை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் வேலைகளிலும் ஜேம்ஸ் ஈடுபட இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

newstm.in

Similar News