நாங்கதான் நாலு கோடி கொடுக்கலையே… பின்னே எப்படி விசாரிக்க..? - கேட்கிறார் எல்.முருகன்

நாங்கதான் நாலு கோடி கொடுக்கலையே… பின்னே எப்படி விசாரிக்க..? - கேட்கிறார் எல்.முருகன்

Update: 2021-06-29 10:21 GMT

பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜாவின் தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் கொடுத்த பணத்தை செலவழிக்காமல், சுப்ரமணியபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கு வீடு கட்டிவருவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம். மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளை பயன்படுத்தியது மற்றும் வீணடித்தது என்பது தொடர்பாக மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கதக்கது.

தேர்தல் செலவினங்களுக்காக கொடுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக எச்.ராஜா மீது புகார் எழுந்துள்ளது. ஆனால், நாங்கள் தேர்தல் செலவுக்கு 4 கோடி கொடுத்தால்தானே அதைப்பற்றி விசாரிக்க முடியும்..? கட்சி சார்பில் வேட்பாளர்களுக்கு பணம் வழங்கவில்லை. எச்.ராஜா மீது நடைபெறும் விசாரணை உட்கட்சி விவகாரம்தான்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News