நெல்லையில் பரபரப்பு..!! விளையாட சென்ற குழந்தைகள் மூச்சு திணறி அடுத்தடுத்து மரணம்...!!
நெல்லையில் பரபரப்பு..!! விளையாட சென்ற குழந்தைகள் மூச்சு திணறி அடுத்தடுத்து மரணம்...!!
பணங்குடி அருகே உள்ள லெப்பை குடியிருப்பு கிராமத்தில் 5 வயதிற்குட்பட்ட 3 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி குழந்தைகள் விளையாடியுள்ளனர்.
அப்போது காரின் கதவுகள் தானாக மூடியதால், வெளியே வர முடியாமல் பரிதவித்த குழந்தைகள், கத்தி கூச்சலிட்டுள்ளனர். தொடர்ந்து கத்திக் கொண்டிருந்த குழந்தைகள் மூச்சுத் திணறி மயங்கி உள்ளனர். வெகு நேரமாகியும் குழந்தைகளைக் காணாத பெற்றோர், அப்பகுதி முழுவதும் தேடி விட்டு, கடைசியில் காருக்குள் குழந்தைகள் இருப்பதைக் கண்டறிந்து, காரில் கதவை உடைத்து பார்த்தபோது, குழந்தைகள் மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.
இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்ட அதிர்ச்சியடைந்த பெற்றொர்கள் கதறி அழும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைப்பதாக இருந்தது. இந்த சமபவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது குழந்தைகள் நிதிஷா (7), நித்திஷ் (5) மற்றும் சுகன் என்பவரது குழந்தை கபிலன் (4) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் காரில் ஏறி விளையாடியபோது, காரின் கதவு தானாக மூடியதால், லாக்கைத் திறக்க முடியமால் குழந்தைகள் வெகுநேரம் கூச்சலிட்டு, வெளியேற முடியாத நிலையில், மூச்சுத் திணறி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேபோன்று கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.