இலங்கையில் மக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் : பிரதமர் ரணில் எச்சரிக்கை

இலங்கையில் மக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் : பிரதமர் ரணில் எச்சரிக்கை

Update: 2022-06-06 10:21 GMT

இலங்கையில் அக்டோபர் வரை மட்டுமே உணவுப்பொருட்களை விநியோகிக்க முடியும் என்றும், அதன் பிறகு நிலைமை இன்னும் மோசமடையும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. அதனை சரிசெய்ய அந்நாடு பல வெளிநாடுகளிலிருந்து உதவி கோரியுள்ளது. நிதியுதவி கிடைக்காவிட்டால் இலங்கயின் எதிர்காலம் கேள்விக்குறி என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், பல நாடுகளிடமும் உதவி கோரியுள்ளோம். நாட்டை புனரமைக்க வேண்டும் பொருளாதார சிக்கலைத் தீர்க்க வேண்டும், நிதி மற்றும் கடனுதவி கிடைக்காவிட்டால் இலங்கை எதிர்காலம் கேள்விக்குறிதான் என்றார்.

உரம் கையிருப்பு இல்லாததால் விவசாயம் முடங்கியுள்ளது. வரும் அக்டோபர் வரை உணவுப்பொருட்களை விநியோகிக்க முடியும், அதன் பிறகு நிலைமை இன்னும் மோசமடையும். மக்கள் 2 வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.

இந்திய அரசு எங்களுக்கு வெகுவாக உதவி வருகிறது. இப்படியே போய்க்கொண்டிருந்தால் ஐஎம்எஃப் உடன் ஒப்பந்தம் போட வேண்டி வரும், நானும் அதை எதிர்நோக்குகிறேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

newstm.in

Similar News