பரபரப்பு... கர்ணன் படம் ஓடிய தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..

பரபரப்பு... கர்ணன் படம் ஓடிய தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..

Update: 2021-04-15 06:15 GMT

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் வெளியானது முதலே படத்தை வரவேற்று விமர்சனங்கள் வெளிவந்தன. அதேபோல் வசூலில் இப்படம் சாதனை படைத்து வருகிறது. கர்ணன் திரைப்படம் கொடியன்குளம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இப்படம் தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில் படம் வெளியாகி ஓடி வருகிறது. இந்நிலையில் இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5 பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து அதற்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பினர். இந்நிலையில் தியேட்டருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரத்தில் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

தாவது, மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள் இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் 5 குண்டுகள் தரையில் விழுந்து வெடித்தது. ஆனால் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.   

இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மூன்று பேரை போலீசார்  பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

newstm.in


 

Tags:    

Similar News