போடுற வெடிய ..!! ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

போடுற வெடிய ..!! ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

Update: 2022-01-31 19:07 GMT

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை உலகம் முழுவதும் ஜனவரி மாதம்  7ஆம் தேதி வெளியிட திட்டமிட்டனர். அதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளும் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்றது.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 

இந்நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதன்காரணமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் 25-ந்தேதி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்பதை படக்குழு அறிவித்து உள்ளது.


 

Similar News