போச்சுடா!! கருப்பு, வெள்ளை, மஞ்சளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை நோய் !! மருத்துவர்கள் அதிர்ச்சி

போச்சுடா!! கருப்பு, வெள்ளை, மஞ்சளைத் தொடர்ந்து பச்சை பூஞ்சை நோய் !! மருத்துவர்கள் அதிர்ச்சி

Update: 2021-06-16 13:15 GMT

கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சையை தொடர்ந்து தற்போது இந்தியாவில் பச்சை பூஞ்சை பரவிவருவது பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பூஞ்சை நோய் மக்களை தாக்கி வருகிறது. இதில் ஏராளமானோர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பூஞ்சை நோயால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் முதன்முதலாக மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு  பச்சை பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 34 வயதான கொரோனா நோயாளி கடந்த ஒன்றரை மாதமாக இந்தூரின் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் தொற்று இருந்தது. 

இதனையடுத்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிநலையில் அவருக்கு தற்போதைய நிலை குறித்து அறிய மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு நுரையீரலில் பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது நாட்டின் முதல் பச்சை பூஞ்சை வைரஸ் தொற்றாகும் என்று இந்தூர் மாவட்ட  சுகாதாரத் துறையின் மேலாளர் அபூர்வா திவாரி கூறினார்.

பச்சை பூஞ்சை வைரஸ் தொற்று பாதிப்பினை உறுதி செய்தபின்பு பாதிக்கப்பட்டட நபர் மும்பை இந்துஜா மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

newstm.in


 

Tags:    

Similar News