மு.க. ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!!
மு.க. ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று அவரது இல்லத்தில் மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, பேரக் குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Best wishes to Tamil Nadu CM Thiru @mkstalin Ji on his birthday. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) March 1, 2022
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அவரது பதிவில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) March 1, 2022